Skip to main content

சாய்பல்லவியுடன் கைகோர்த்த சூர்யா

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Surya presents Saipallavi 'gargi' movie in tamil

 

2015-ல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் 'மலர்' கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் சாய்பல்லவி. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில்  ராணா டகுபதி நடிப்பில் வெளியான 'விரத பர்வம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசிற்கு முன்பு சாய் பல்லவி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானாலும், படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

 

இதனிடையே கவுதம் ராமசந்திரன் இயக்கும் 'கார்கி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் 'கார்கி' படத்தை தமிழில் சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்'  வெளியிடவுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து ஒரு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "நான் மற்றும் ஜோதிகா இருவரும் கார்கி படக்குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புது சிந்தனைகளும் எழுத்துக்களும் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் 'கார்கி' பிடிக்கும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஒரே ஒரு வசனம் - ஆக்ரோஷமாக கத்தும் சூர்யா

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
suriya kanguva teaser released

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று பின்பு சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சற்று தாமதமாக வெளியானது. டீசரில், பீரியட் ட்ராமா ஜானருக்கே உரித்தான கப்பல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் சூர்யாவிற்கும் பாபி தியோலுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமெனத் தெரிகிறது. இரு தரப்பிற்கும் நடக்கும் மோதலே படக்கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம் வருகிறது. அதுவும் சூர்யா ஆக்ரோஷமாக ‘பெருமாச்சி..’ எனக் கத்தும் காட்சியாக இருக்கிறது. பட வெளியீடு குறித்து டீசரில் சொல்லவில்லை. விரைவில் அது குறித்த அப்டேட் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.