/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/138_12.jpg)
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய சூர்யா," உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்துஎன் படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நாம கொண்டாடிட்டுஇருக்குற இந்த நேரத்துல தான் உக்ரைன்லஎதுமே அறியாதவங்கஅப்பாவிகள், பொதுமக்கள், குழந்தைகள் என இந்தியாவைச் சேர்ந்த நிறைய பேர் அங்கஇருக்காங்க அவங்க பாதுகாப்பாகஇந்தியாவுக்கு வரணும், அங்கஇருக்க மக்களும் பாதுகாப்பாகஇருக்கணும். இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர நம்ம அரசாங்கம் நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் அங்கிருந்து வெளிவரும்விடியோக்களைப் பார்க்கும் போது மனசு படபடக்குது. ஒரு தம்பியையும்நாம நேற்று இழந்து இருக்கோம். உயிர் சேதம்ஏதும் இல்லாமல் அவர்கள் தாயகம் திரும்பச் சிறிது நேரம் பிரார்த்தனைசெய்யலாம். எனக்கு கூட்டு பிரார்த்தனை மேல நம்பிக்கை இருக்கு அதுபோல உங்களுக்கும் இருக்குன்னு நம்புறேன்" என்று கூறினார். அத்துடன் நடிகர் சூர்யா தனது ரசிகர்களுடன் சிறிதுநேரம் கூட்டு பிரார்த்தனை செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)