Advertisment

இயக்குநர் பா. ரஞ்சித்தை பாராட்டிய சூர்யா !

 Surya praises director pa ranjith

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட்ஸ்தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பழங்குடி மக்களுக்கு குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bf815453-101a-4929-9c80-d6d70050b8f4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/enemy%20website-in-side-ad.jpg" />

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'ஜெய் பீம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள சூர்யா, தற்போது படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.அதில், "'ஜெய் பீம்' தலைப்பு முதலில் இயக்குநர் பா. ரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று நாங்கள்இந்த மாதிரி படம் எடுக்கிறோம். எங்களுக்கு 'ஜெய் பீம்' தலைப்பு வேண்டும் என்று கேட்டோம். உடனே, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், 'ஜெய் பீம்' எல்லாருக்கும் சொந்தமானது என்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

Pa Ranjith actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe