/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ss_32.jpg)
இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து சிவாவின் அடுத்த படம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குநர் சிவா நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா இரு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பணிகளை இயக்குநர்சிவா தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு சிவா படத்தில் கவனம் செலுத்த உள்ளதாககூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், இயக்குநர்தா.செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)