Advertisment

surya oh my dog movie teaser released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து '2டி என்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இராமேஆண்டாலும், இராவணே ஆண்டாலும், ஜெய் பீம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.

Advertisment

இதனைத்தொடர்ந்து 2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் தற்போது ஓ மை டாக் என்ற படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஓ மை டாக் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 21 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கும் நாய்க்கும் இடையே உள்ள உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின்டீசர் தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான 2டி நிறுவனத்தின் படைப்புகள் ரசிகர்களிடையே வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படமும் வெற்றி பெரும் என டீசரை பார்த்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.