என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வெளியாக இருக்கும் படம் ‘காப்பான்’. மாற்றான் படத்திற்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் இது. மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். முதல் படம்‘அயன்’ஹிட்டை போல இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பான் படத்தின் படபிடிப்பு முடிந்து ரிலீஸுக்கான வேலையில் உள்ளதால் இந்த படத்தின் மீத் பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். மே 31ஆம் தேதி என்.ஜி.கே வெளியான பின்பு வெகு விரைவில் காப்பான் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

kappan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

காப்பான் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் காப்பான் படத்தின் அப்டேட் ஒன்று விரைவில் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து, என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குழம்பி தவித்தனர். காப்பான் படத்தின் டீஸர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவார்கள் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வந்தது.

இந்நிலையில், கே.வி. ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் காப்பான் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீஸர் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் இருந்தது. மேலும் அதனுடன் ‘ ஆம் , நீங்கள் அனைவரும் நினைத்ததை போல காப்பான் படத்தின் டீஸர்தான் வெளியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காப்பான் படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடிப்பதாகவும் மோஹன் லால் பிரதமராக நடிப்பதாக முன்னமே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோஹன் லால், ஆர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்து வருகிறது.