Advertisment

ஷூட்டிங் தொடங்கும் முன்பே சர்ச்சையில் சூர்யா படம்!

சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஷுட்டிங் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Advertisment

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், சூர்யாவும் இயக்குனர் ஹரியும் ஆறாவது முறையாக இணைந்து ‘அருவா’ என்றொரு படத்தை உருவாக்க இருக்கின்றனர் எனவும், இயக்குனர் ஹரியின் 16வது படமான இது வருகின்ற ஏப்ரல் தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் பாடலாசிரியர் ஏகாதசி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு அருவா என்று பெயரிடப்பட்டு, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் தருண் கோபி தயாரித்துள்ளார்.

‘சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு எப்படி அருவா என்ற தலைப்புக்கு அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை நாங்கள் எங்களுடைய தலைப்பை விட்டுக்கொடுப்பதாக இல்லை’ என்று ஏகாதசி தெரிவித்துள்ளார். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே சூர்யாவின் இப்பட தலைப்பு சர்ச்சையாகியுள்ளது.

actor surya hari
இதையும் படியுங்கள்
Subscribe