/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_159.jpg)
சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவுபெற்ற நிலையில், ரிலீஸுக்கான பணிகளை படக்குழு மேற்கொண்டு வந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே அண்மையில் இப்படத்தின் டீஸரை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் தணிக்கை செய்யப்பட்ட விபரங்களை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வெளியிட்டு 'சூரரைப் போற்று' படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக பதிவிட்டனர்.
இது தற்போது வைரலான நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 'சூரரைப் போற்று' வெளியிடப்படும் எனவும், படம் கண்டிப்பாக ஓடிடியில் வெளியாக சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)