அடுக்கடுக்கான புகார்கள்... திடீரென நீக்கப்பட்ட சூர்யா படம்! 

sirya

கடந்த 2016ஆம் ஆண்டு சூர்யா நடித்து விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான படம் 24. இந்த திரைப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

டைம் ட்ராவல் என்னும் அறிவியல் ரீதியாக கதையை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பலரையும் கவர்ந்தது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

கரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகளில் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஓடிடி தளங்களின் வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதால், புது படங்கள் மட்டுமின்றி, பழைய படங்களையும் வெளியிட்டு வருகின்றன ஓடிடி தளங்கள்.

அந்த வகையில் சூர்யாவின் 24 திரைப்படத்தை ப்ரைம் ஓடிடியில் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், வெளியிட்டபோதிலிருந்தே படத்தை தேடிப் பார்ப்பதில் சிக்கலாக இருக்கிறது என்று ட்விட்டரில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின் படத்தின் சவுண்ட் குவாலிட்டி சரியாக இல்லை என்றபயனர்களின் குற்றச்சாட்டுகளுக்கு இணங்க இந்த படத்தை திடீரென நீக்கியுள்ளது ப்ரைம். அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்துவிட்டு மீண்டும் ஓடிடியில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

actor surya
இதையும் படியுங்கள்
Subscribe