/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/58_41.jpg)
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய சூர்யா மாணவர்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக, "1 நாளில் ஒரு 10 நிமிடம் மோசமாக நடந்துவிட்டதற்காக முழு நாளையும் வீணாக்கப்போவதில்லை. அதே தான் ஒரு வாரம். ஒரு மாதம். வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். காலையில் எழுந்து பிரேயர் செய்வது, தூங்கி எழுந்து பெட்ஷீட்டை மடிப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.
என் அப்பா 4 மணிக்கு எழுந்து, யோகா செய்து, வாக்கிங் சென்று...அப்படித்தான் வாழ்க்கையை நடந்துகிட்டு இருக்காரு. ஆனால் எல்லாருக்கும் லேட்டா தானே புரிதல் வரும். அந்த மாதிரி இப்போதான் சீக்கிரமா எழுந்திருக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த பழக்கங்கள் நிச்சயமாக நமது நாளை முழுமையாக மாற்றி விடுகிறது. இதனால் நமது உணவுகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் மாறுகிறது. அதனால் நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வச்சிடுங்க. அதே சமயம் அதை தவிர்க்கவே முடியாது. வந்துகொண்டே இருக்கும். மற்றவர்களுடைய உணர்வை புரிந்துகொள்ளும் போது தான் மனிதம் உயரும். அதை எல்லா மாணவர்களிடமும் பார்க்கிறேன். அகரமுக்கு நன்கொடை கொடுத்த எல்லா அமைப்புகளுக்கும் வழிநடத்தி வருகிற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் எங்களுக்கு இலவசமாக இடமளித்த கல்லூரிகளும் நன்றி" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)