surya latest speech about students

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவை தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிகழ்வில் பேசிய சூர்யா, "இந்த அறக்கட்டளை இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறது என்றால் எங்களின் ஆத்தாவின் வழிகாட்டுதல் தான். உதவி பண்ணுவதை விட நிலைத்து நிற்பது தான் முக்கியம். தொடர்ந்து ஒரு மாற்றத்துக்கான காரணமாக துணை நிற்பது, ஒரு சவால் நிறைந்த ஒன்று. 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாணவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் பெரிய விஷயம். இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி ஆறுமுகம் என்றவர் தான். அவர் ஒருத்தர் பண்ண உதவி பட்டர்ஃபிளைஎஃபைக்ட் போல பரவியிருக்கு.

Advertisment

அகரம் மாணவர்கள் தனித்தன்மையாக இருப்பதாக பல ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அகரம் மாணவர்களுக்குத்தலைமைப் பண்பு அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளால் தான் வாழ்க்கை முழுமை அடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அகரம் அறக்கட்டளையில், மாணவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்வார்கள். அப்படி ஜெய ஸ்ரீ என்ற மாணவி, தன்னுடைய கணவர் தான் வாழ்கையின் அர்த்தத்தை புரிய வச்சாரு என்றார். அந்த மாணவிக்கு 25 வயசு . கணவருக்கு 27 வயசு. அந்த கணவர் அகரம் அறக்கட்டளையின் மாணவர். அதை பார்க்கும் போது பெரிய சந்தோசம் கிடைத்தது. ஒரு பெண்ணுடைய உணர்வுக்கு மதிப்பளித்து அந்த இடத்தை ஒரு 27 வயது மாணவர் கொடுத்திருக்கிறார் என்றால், அவரை வியந்து ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். அந்த பொறுப்புணர்ச்சி எனக்கு கிட்டத்தட்ட 40 வயதில் தான் வந்திருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும் என் வீட்டில் உள்ள பெண்களை பற்றிய உணர்வு, புரிதல் இல்லை.

அந்த மாணவர்கள் மாதம் ஒரு 3000 ரூபாயை முழுசாக பார்த்திருக்க மாட்டார்கள். அந்த மாணவர்களுக்கு அகரம், ஒரு முக்கியமான இடத்தை குடுத்திருக்கிறதைப் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அகரம் மாணவர்கள் பெரிய இடத்தை உருவாக்குவார்கள்" என்றார்.