Advertisment

விஜய் படத்தை ரசித்த கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்

surya kumar yadav watching vaarisu movie

Advertisment

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத்டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 233 ரன்கள் எடுத்து. பின்பு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து இப்போட்டியில் தோல்வியுற்றது.

இப்போட்டியில் தோற்றதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் சூர்யகுமார் யாதவ்விஜய் நடித்த வாரிசு படத்தை பார்த்து ரசித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay surya kumar yadav
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe