Skip to main content

கேரளா மழை வெள்ளத்திற்கு லட்ச கணக்கில் நிதி அளித்த சூர்யா - கார்த்தி  

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
surya karthi

 

 

 

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கேரளா அரசு தற்போது மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகியுள்ளனர். மேலும் 'கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது' - பிரியா பவானி ஷங்கர் 

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

maniyarfamily

 

priya

 

 

 

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் ரஜினி, கமலின் அரசியல் பயணம் பேசியபோது... "நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில வி‌ஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. ரஜினி, கமல் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேர படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த வி‌ஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன். ஆனால் அவர்களுடைய படம் வெளியானால் நான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.

 

 

 

 

 

Next Story

'ஆடு, மாடுகளை உங்களால் ஒரு இடத்துக்கு ஓட்டி செல்ல முடியுமா...' - பீட்டாவை வெளுத்த பாண்டிராஜ் 

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
pandiraj

 

 

 

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமண், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேசியபோது... "யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை.

 

 

 

பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு, மாடுகளை நாங்கள் அண்ணன், தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு, மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா...? கண்டிப்பாக முடியாது...? அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது...? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே, தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க. மட்டன், சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்" என்றார்.