/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/surya_53.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சூரி, வினய் ராய், உள்ளிட்ட பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பைவெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனைதனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதிசெய்த சூர்யா," என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்.. ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன்நான்.. அப்பா ஆசிர்வதிக்கமீண்டும்ஒரு அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்.. அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பாலா - சூர்யா கூட்டணியில் 'நந்தா, பிதாமகன்' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனையடுத்து பாலா இயக்கத்தில் வெளியான 'அவன்இவன்' படத்தில் நடிகர் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2003 ஆண்டு வெளியான 'பிதாமகன்' படத்திற்கு பிறகு 17 ஆண்டுகளுக்கு கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளது சூர்யா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில்வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)