அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை சூர்யாவை வைத்து இயக்கிய கே.வி. ஆனந்த், மூன்றாவது முறையாக சூர்யாவை வைத்து ‘காப்பான்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் என்.ஜி.கே மே-31ஆம் தேதி வெளியான பின்பு ஆகஸ்ட் -30ஆம் தேதி வெளியாகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காப்பான் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஆர்யாவிற்கும், மோகன் லாலுக்கும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சூர்யாவிற்கு என்று சில காட்சிகள் மீதம் இருக்கிறது. அவை அனைத்தையும் படக்குழு வேகமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில், காப்பான் படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஜாவா தீவு சென்றுள்ளது படக்குழு. படத்தளத்திற்கு சென்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த முடிவடைந்ததும் சூர்யா அடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப்போற்று, சுதா கொங்காரா இயக்குகிறார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.