/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/58_15.jpg)
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ஜெய் பீம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யா, தன்னுடைய 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இது நடிகர் சூர்யாவின் 39ஆவது படமாகும்.
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடியின மக்களுக்காக போராடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப்பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
இப்படம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் திடீரென ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதுசூர்யா ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)