Published on 03/11/2018 | Edited on 03/11/2018

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே’ படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக இல்லாமல் புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.