Skip to main content

சென்னை மாநகர காவல்துறைக்கு சூர்யா செய்த உதவி; குவியும் பாராட்டு

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

surya gives car chennai police helpline

 

சென்னை மாநகர காவல்துறை, வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இந்த வாகனம் இவர்களுக்கான உணவு வழங்குவதற்கு பயன்படும். இந்த வாகனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால், டாக்டர் திருமதி சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி வரும் நடிகர் சூர்யாவின் சேவை, வீதியோர மற்றும் வீடற்ற மக்களுக்காக தொண்டாற்றி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றி வருவதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.