ADVERTISEMENT

சூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு  

05:57 PM Oct 30, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

சூரரை போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள், படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். முதலில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், இந்திய விமானப்படையின் தடை இல்லா சான்று பெற தாமதமானதால் தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் இந்திய விமானப்படை, இப்படத்திற்கு தடையில்லா சான்றளித்தது. இதை தொடர்ந்து, சூரரை போற்று படம் நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரை போற்று படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT