Advertisment

ஒன்றரை வருடம் கழித்து வெளியான சூர்யா படம்... நெகிழ்ச்சி ட்வீட்...

கடந்த வருடம் பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இதனை அடுத்து கடந்த வருட தீபாவளிக்கு செல்வராகவன் கூட்டணியில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டு படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisment

ngk surya

இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். பின்னர், தயாரிப்பு குழுவும் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கும்படி வேண்டுகோள் விட்டது. இதனை அடுத்து என்.ஜி.கே படம் மே 31 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஒன்றரை வருடம் கழித்து தன்னுடைய படம் வெளியாகிய நிலையில் அதை கொண்டாடும் ரசிகர்களுக்காக நெகிழ்ச்சியான ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “அன்பே தவம், அன்பே வரம். வெற்றி, தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழக் காத்திருக்கிறேன். உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார் சூர்யா.

என்.ஜி.கே. படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

Surya NGK
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe