Advertisment

தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தும் சூர்யா 

surya dubs his own voice for  telugu version etharkkum thunindhavan movie

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் தெலுங்கு மொழிக்காக டப்பிங் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படதயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'தெலுங்கு ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் இருக்கு' என்று குறிப்பிட்டுள்ளது. சூர்யாவின் படங்கள் ஏற்கனவே தெலுங்கு மொழியில் வெளியாகி இருந்தாலும் முதல் முறையாக நடிகர் சூர்யாவின் சொந்த குரலில் 'எதற்கும் துணிந்தவன்' படம்வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

telugu cinema actor surya Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe