'காக்ககாக்க', 'வாரணம்ஆயிரம்' எனதமிழ் சினிமாரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டுபடங்களைதந்த கூட்டணி,கௌதம்மேனன்- சூர்யாகூட்டணி.கௌதம்மேனனும்சூர்யாவும் மூன்றாவது முறையாக 'துருவ நட்சத்திரம்' படத்தில்இணைவதாக இருந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாகஇருவரும்பிரிந்தனர். பின்பு துருவ நட்சத்திரம் படத்தை, விக்ரமை வைத்து இயக்கினார் கௌதம்மேனன். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
சூர்யா-கௌதம் மேனன்மீண்டும் இணைவார்களா எனரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சமீபத்தில் கெளதம்மேனன், சூர்யாவுக்காக கதைஒன்றை எழுதி வருவதாகவும், அதுஇரண்டு இசையமைப்பாளர்களின் இடையேயானகாதல்பற்றிய கதைஎனவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சூர்யா-கெளதம் மேனன்இணையும் படம் பற்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா, வெற்றிமாறன், பாண்டிராஜ் எனவேறு இயக்குநர்களோடு இணைவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. இதனால் சூர்யா- கௌதம்மேனன்இணைவது தாமதமாகும் எனஎதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மணிரத்தினம் தயாரிக்கும்'நவரசா' அந்தாலஜியில்,சூர்யா, விஜய்சேதுபதிஉள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடிக்க, கௌதம்மேனன், கே.வி. ஆனந்த்உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் இயக்குவார்கள் எனஅறிவிக்கப்பட்டது. ஆனால், அதில்எந்த இயக்குனர், எந்த கதாநாயகனைஇயக்குவார் எனஅறிவிக்கப்படவில்லை. இதிலாவது சூர்யாவும்- கௌதம் மேனனும்இணைவார்களா எனரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில், கௌதம்மேனன்இயக்கத்தில், 'நவரசா' அந்தாலஜியில் நடிப்பதைசூர்யாஉறுதிப்படுத்தியுள்ளார்.