Advertisment

"ஒரு இனிய தொடக்கம்..." - அக்ஷய் குமார் படக்குழுவை நேரில் வாழ்த்திய சூர்யா

surya goes mumbai soorarai pottru hindi remake

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானதுஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தில் தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கின்பணிகளை பார்வையிடுவதற்காக நடிகர் சூர்யா மற்றும் அவரது 2டி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர்இருவரும் மும்பை சென்றுள்ளனர். அங்கு நடிகர் அக்ஷய் குமார், சுதா கொங்கரா மற்றும் படக்குழுவினர்களைநேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும்நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

actor surya akshay kumar soorarai potru sudha kongara
இதையும் படியுங்கள்
Subscribe