சூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.

surya kappan

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து சிறுக்கி என்றொரு பாடல் வெளியான நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்று இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க இருப்பதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி அன்று மிக பெரியளவில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும். அதில் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

kaappaan
இதையும் படியுங்கள்
Subscribe