/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_19.jpg)
'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மூன்றாவது முறையாக பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். '2டி என்டர்டைன்மெண்ட்' சார்பாக சூர்யா ஜோதிகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக செட் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வேலைகள் முடிந்த பிறகு ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், அதன் காரணமாகத்தான் சூர்யா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது என நேற்று மாலைமுதல் தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2டி நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)