Advertisment

'விக்ரம் பார்ட் 3' க்கு ரெடியாகும் சூர்யா; ட்விஸ்ட் வைத்த கமல்ஹாசன்

Surya Appearance and Vikram Part3 that moves story further

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே பிரான்சில் நடைபெறும் 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் அந்த திரைப்படவிழாவில் விக்ரம் படத்தின் ட்ரைலரும்திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் கேன்ஸ்திரைப்பட விழாவில் கொடுத்த பேட்டியில் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம்குறித்து பகிர்ந்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். மேலும் அந்த கதாபாத்திரம் விக்ரம் மூன்றாம் பாகத்திற்கானதொடக்கமாக இருக்கும் எனத்தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம்'படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கமல், சூர்யாவின் கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தின்தொடக்கமாகஇருக்கும் எனத்தெரிவித்துள்ள நிலையில் அப்போமுதல் பாகம் பழைய 'விக்ரம்' என்றும், தற்போது உருவாகியுள்ள 'விக்ரம்' இரண்டாவது பாகம் என்றும், அடுத்து உருவாக்கவுள்ளதுமூன்றாவது பாகம்என்றும் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் இதில் எது முதல் பாகம் என்று படக்குழு விளக்காத வரையில் தெரியப்போவதில்லை. எது எப்படியோ சூர்யா நடிக்கும் மூன்றாவது பாகம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த விதமானசந்தேகமும் இல்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ACTOR KAMAL HASSHAN actor surya kamalhaasan vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe