Advertisment

மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி; ஜி.வி பிரகாஷ் உறுதி

surya and sudha kongara will return new film

சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 10ம்தேதி வெளியாக உள்ளது. இடத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோரது படங்களில்நடிக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உறுதி செய்துள்ளார்.

Advertisment

ஜி.வி பிரகாஷ், கெளதம்மேனன் இருவரும் இணைந்து 'செல்ஃபீ' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாவதை ஒட்டிசமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் இன்று(8.2.2022) ஜி.வி பிரகாஷ் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா-சுதா கொங்கரா இருவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் இதற்குபதிலளித்த ஜி.வி பிரகாஷ், "கண்டிப்பாக இருவரும்இணைகிறார்கள், இந்தாண்டின் இறுதியில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம், அதற்கான வேலைகள் நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யா - சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் பெரும் வெற்றி நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதுரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், படத்தின் மீது எதிர்பார்ப்பையும்அதிகரித்துள்ளது.

Advertisment

soorarai potru GV prakash sudha kongara actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe