உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் பல துறைகளின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.

Advertisment

corona virus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஃபெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடிகர் சிவக்குமாரும், அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து தங்களால் இயன்ற 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

Advertisment

அதேபோல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் 250 மூட்டை அரிசயைப் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தொழிலாளர்களுக்குக் கொடுத்து உதவியுள்ளார். ஒரு மூட்டை 25 கிலோ எடை கொண்டது. இவர்களின் உதவிகளைத் தொடர்ந்து மேலும் பலர் உதவ முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.