
கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பொங்கலுக்கு வெளியான பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்படும் என் ஜி கே என்ற படம் தீபாவளிக்கு ரிலிஸாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் சூர்யா கே.வி. ஆனந்த இயக்கத்தில் நடித்துகொண்டிருந்தார். அப்போது இந்த படத்திற்கு பெயர் எதுவும் வைக்காமல் சூர்யா 37 என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சூர்யாவின் படத்திற்கு பெயர் வைக்கும் வாய்ப்பை அவரது ரசிகர்களுக்கே தருகிறேன் என்று ட்விட்டரில் மூன்று பெயர்களை வெளியிட்டு வாக்கெடுப்பை நடத்தினார். அதில் மீட்பான், காப்பான், உயிர்கா என்று மூன்று பெயர்களை பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பலர் அந்த பதிவில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்தனர். பலரால் உயிர்கா என்ற பெயரையே தேர்வு செய்தனர். ஆனால், படக்குழுவோ ஜனவரி 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காப்பான் என பெயரை வைத்தது போஸ்டரை வெளியிட்டது.
கே.வி. ஆனந்த தேர்வு செய்யுமாறு பதிவிட்ட அந்த மூன்று பெயர்களும் ஒரு உயிரை காப்பாற்ற செல்பவன் என்கிற அர்த்தத்தையே தந்தது. இந்த படத்தில் ஒருவருடைய உயிரை காப்பாற்ற ஹீரோவான சூர்யா சென்று, அவரை எப்படி காப்பாற்றி வருகிறார் என்பதே கதையாக இருக்கும் என்று பலருக்கு பொறி தட்டியுள்ளது.