இந்த வருடத்திலேயே அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் நேர்கொண்ட பார்வை. இது ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Advertisment

bocquet

கடந்த 8ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு நடைபெறும் அநீதியை பற்றி பேசும் இந்த படம், நல்ல சமூக கருத்தையும் கொடுக்கிறது.

இதனால் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து வந்தனர். நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவும் முதல் நாள் முதல் ஷோ இப்படத்தை பார்த்ததாக தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில், நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து அஜித்திற்கும் இயக்குனர் ஹெச். வினோத்திற்கும் பூங்கொத்தை அணுப்பி தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.