Advertisment

சூர்யா - சிறுத்தை சிவா படம் குறித்து வெளியான புதிய தகவல்

surya and siruthai siva movie update out now

Advertisment

'எதற்கும் துணிந்தவன்' படத்தைதொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். பாலா படத்தின் பணிகளை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார்.

இதனிடையே நடிகர் சூர்யா இயக்குநர் சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாக்கவுள்ள இப்படம்பீரியட் கலந்த ஆக்சன் கதையாகஇருக்கும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்', 'கே.ஜி.எஃப்' படங்களைபோல இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

siruthai siva surya 41
இதையும் படியுங்கள்
Subscribe