Advertisment

“இதை மீறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” - சூர்யா படக்குழு எச்சரிக்கை

surya 42 warned release shooting spot stills and videos

Advertisment

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். கிர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு சில மாதங்களான நிலையிலும், இன்றுவரைஇப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேஉள்ளது.

இதனிடையே சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் ’சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் சூர்யா, அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். சமீபத்தில் சூர்யா 42 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை படத்தின் நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ’சூர்யா 42’ படக்குழு, “சமூக வலைதளங்களில் ’சூர்யா 42’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை கவனித்து வருகிறோம். நாங்கள்செய்யும் ஒவ்வொரு வேலையும் இரத்தம் மற்றும் வியர்வையைஉள்ளடக்கியது. இந்த படத்தை பிரமாண்டமான அனுபவமாக உங்களிடம் தருவதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். அதனால் தயவு செய்து சூர்யா 42 சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம். அப்படிபகிர்ந்தால் அதனைஉடனடியாக நீக்கி விடுங்கள். இதனைமீறினால் உரிமை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisment

actor suriya siruthai siva Suriya 42
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe