/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1229.jpg)
'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மீனவர் சமூகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள சூர்யாவின் புகைப்படம் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவாவில் விரைவில் தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)