vdzvd

Advertisment

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, 'சூர்யா 40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் சூர்யா இல்லாத காட்சிகளைப் படக்குழு படமாக்கி வந்த நிலையில், 'சூர்யா 40' படக்குழுவினரோடு நடிகர் சூர்யா சமீபத்தில் இணைந்து கொண்டார். இதையடுத்து, தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின்போது வேட்டி சட்டை அணிந்திருக்கும் சூர்யா, கையில் பெரிய வாளுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.