நடிகர் சூர்யா நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடிதளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம்வெளியிட்டுள்ளது. அதன்படி, சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இவர், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.@priyankaamohan will play the female lead in #Suriya40BySunPictures@Suriya_offl@pandiraj_dir@immancomposer#Suriya40pic.twitter.com/KYyIrdhCrH
— Sun Pictures (@sunpictures) January 28, 2021