Advertisment

சூர்யா 40... சம்பவத்தைத் தொடங்க நாள் குறித்த இயக்குனர்!

suriya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு 'சூர்யா 40' எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா நெருக்கடிநிலை தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அனுமதியைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த பாண்டிராஜ், சூர்யா படம் குறித்தான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் எதிர்பார்ப்பும், ஆவலும் புரிகிறது! சூட்டிங் பிப்ரவரியில்தான். இன்னும் முக்கியமான 2 கேரக்டர் இறுதி செய்யப்பட்டதும் 2, 3 வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும். காத்திருப்போமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor suriya director pandiraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe