சூர்யாவின் 38வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்திற்கு‘சூரரைப் போற்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Advertisment

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இவ்விரண்டு படங்களும் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் என்.ஜி.கே மே 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Advertisment

இந்த இரண்டு படங்களை அடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ‘சூர்யா 38’ என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு ‘சூரரைப் போற்று’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

நாளை தமிழ் புத்தாண்டை ஒட்டி ‘காப்பான்’ டீஸர் இரவு 7:00 மணிக்கு வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.