Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நடிகர் சூர்யா - இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் 3வது படமாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதை உறுதிப்படுத்தும் விதமாக "மதிப்பிற்குரிய பிரதமர் சந்திரகாந்த் வர்மா நம் தேசத்தின் 4கே அல்ட்ரா யுகத்தின் கம்பீரமாக திகழ்கிறார்" என மோகன்லால் முகம் பொறிக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் சூர்யா பிரதமர் மோகன்லாலுக்கு பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மேலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் கசிந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.