/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_29.jpg)
சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். பின்பு சிறுத்தை சிவா இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா வருகிற 23-ஆம் தேதி 48-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு வருகிற 22,23,24ஆம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்களில் சென்னையில் உள்ள க்ரீன் சினிமாஸ் திரையரங்கில் 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய் பீம்' படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்த இரண்டு படங்களுமே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)