Advertisment

சூர்யாவின் புது ப்ளான்; வெளியான மாஸ் தகவல்

Suriya's New Plan

Advertisment

சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை 'வாடிவாசல்' படக்குழு வெளியிட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="31290684-4b64-4f3a-92b7-4aa2570cb060" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_20.jpg" />

இதனிடையே ஏழை மாணவர்களுக்கு கல்வியில் உதவ 'அகரம்' என்ற அறக்கட்டளையும், நல்ல படங்களை தயாரிக்க '2டி என்டேர்டைன்மெண்ட் ' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சூர்யா நடத்தி வருகிறார். இந்நிலையில் சூர்யா அடுத்ததாக திரையரங்குகளை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து திரையரங்குகளை சூர்யா குத்தகைக்கு வாங்கி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe