/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_175.jpg)
2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெய் பீம்’ படத்தில் எந்தத் திருத்தமும் இல்லாமல் படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, இப்படத்தின் மொத்த கால அளவு 164 நிமிடங்கள் ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)