/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_28.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான ‘வர்மா’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு ஓடிடியில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவின. சூர்யா, அதர்வா, ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் எனப் பல நடிகர்களிடம் பாலா கதை சொல்லியுள்ளதால் அடுத்ததாக யாரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்த நிலையில், பாலா இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படிஇயக்குநர் பாலா, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின்2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நாச்சியார்’, ‘வர்மா’ என்ற இரு திரைப்படங்களுமே வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், இம்முறை வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு பாலா உள்ளாகியுள்ளார். இப்படியான இக்கட்டான சூழலில் நடிகர் சூர்யா பாலாவிற்கு கைகொடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)