"மிக்க நன்றி அண்ணா" - சூர்யாவின் வாழ்த்துக்கு சிம்பு பதில்

suriya wishes the team of simbu Vendhu Thanindhathu Kaadu

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று (15.09.2022) வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் சிம்பு, கௌதம் மேனன், ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், "படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்வி படுகிறேன். மேலும் படம் பார்க்க காத்திருக்கிறேன். படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு, "மிக்க நன்றி அண்ணா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சூரி, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

actor simbu actor suriya gautham menon Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Subscribe