"எப்போதுமே திகைப்பேன்" - சூர்யா வாழ்த்து

suriya wishes mammooty jyothika kaathal movie trailer

மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் 'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் கோவாவில் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கும் 54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது. ட்ரைலரில் மம்மூட்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போது ஒரு பிரச்சனை வருகிறது. இதை தாண்டி இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தாரா, என்ன பிரச்சனை வந்தது என்பதை விரிவாக காண்பித்துள்ளது போல் தெரிகிறது. இந்த ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, "மலையாளத் திரையுலகம் எப்படி சவாலான கதைகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக உருவாக்குகிறது என்பதைப் பார்த்து எப்போதுமே திகைப்பேன்" எனக்குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

actor suriya malayalam
இதையும் படியுங்கள்
Subscribe