பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று (06.10.2023) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், சூர்யா இப்படத்திற்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இறுகப்பற்று படம் நிறைய அன்பைப் பெற்று வருவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்திடமிருந்து மீண்டும் ஒரு நல்ல கதையுள்ள படம். யுவராஜுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.