suriya vel movie re release in his 49th birthday

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முன்னதாக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜெயராம், கருணாகரன், சுஜித் ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Advertisment

suriya vel movie re release in his 49th birthday

இந்தச் சூழலில் வருகிற 23ஆம் தேதி தனது 49வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா. இதைக் கொண்டாடும் வகையில் ஹரி இயக்கத்தில் அவர் நடித்த வேல் திரைப்படம் ரீ ரிலீஸ் திட்டத்தில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்க அசின், வடிவேலு, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை காண சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதனிடையே அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.