Skip to main content

கேள்விகளுக்கு புதிய கல்வி கொள்கையின் பதில் என்ன? - சூர்யா ட்வீட்

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.
 

suriya

 

 

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த வரைவு திட்டம் பற்றி தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

அதில், “30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதைப்பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை. அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்யவேண்டும்? உயர்கல்வி படிக்க தகுதித்தேர்வு அவசியமா? கல்வி கற்பிக்கிற மொழி கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா? நம் குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய இதுபோன்ற பல கேள்விகளுக்கு புதிய கல்வி கொள்கையின் பதில் என்ன? நம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால் கல்வி கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாக கடந்து விடுகிறோம். அந்த அமைதி நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். கல்விக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர் புதிய கல்வி கொள்கை பற்றி படித்து தெரிந்துகொள்வது அவசியம். ஜூன் 30-ந் தேதிக்குள் இந்த கல்வி கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு உள்ள புதிய கல்வி கொள்கையை, தமிழில் மொழிபெயர்த்த அறிஞர் குழுவுக்கு நன்றிகள். நம்முடைய பங்கேற்பு மட்டுமே, நம் வீட்டு பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும். அனைவரும் பங்கேற்று சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழக கல்வியாளர்களிடம் இருந்து விளக்கங்களை பெற்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம். கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்