Advertisment

"அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" - கார்த்தியை கலாய்த்த சூர்யா

suriya tweet about karthis tweet

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா தனது 25வது ஆண்டு திரைப்பயணத்தை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "கனவு காணுங்கள், நம்புங்கள்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதனிடையே கார்த்தி சூர்யா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸாக ஆக மாற்ற இரவும் பகலும் உழைத்தார்." என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கார்த்தியின் பதிவை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "வந்தியத்தேவா... அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சூர்யா கிண்டலாக பதிவிட்டுள்ள இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

actor karthi actor suriya
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe