Advertisment

"இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி" - பிரபல நடிகர் குறித்து சூர்யா

suriya tweet about Ajay Devgn

Advertisment

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று த்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் இதில் விருதுக்கு தேர்வான நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

அந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் தனித்தனியே வாங்கினார். அப்போது அரங்கில் தனது அருகில் அமர்ந்திருந்த அஜய் தேவ்கனை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அஜய் தேவ்கன், அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி சார். இந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் மீது மிகுந்த மரியாதை உங்களது அடுத்த படங்கள் கைதி மற்றும் சிங்கம் படத்திற்காக காத்திருக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன், தற்போது கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக் மற்றும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார். இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 1 மற்றும் 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ajay devgan actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe