Suriya, training with the Jallikattu fighters for vaadivaasal - video released

Advertisment

சூர்யா தற்போது பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். 'வி க்ரியேஷன்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனிடையே நேற்று நடந்த 68-வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருது 'சூரரைப் போற்று' படத்திற்காக சூர்யாவிற்கு அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சூர்யாவின் 48ஆவது பிறந்த தினம் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'வாடிவாசல்' படக்குழுவினர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து, வாடிவாசல் படத்திற்காக சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் சூர்யா படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.